Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் கமிஷனுக்கே ‘கண்ணா மூச்சிக்காட்டும்’ ஊடகங்களின் பேக்கேஜ் சிஸ்டம்.ஊடக வெளிச்சத்தில் இருந்து மறையும் விஜய்,சீமான் உள்ளிட்ட கட்சியினர்.

0

'- Advertisement -

தேர்தல் கமிஷனுக்கு ‘கண்ணா மூச்சிக்காட்டும்’ ஊடகங்களின் பேக்கேஜ் சிஸ்டம்.

 

Ad banner

பேக்ஜ் தொகை மிக மிக அதிகமாக உள்ளதால் நடிகர் விஜய்யின் த.வெ.க., சீமானின் நாம் தமிழர், வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஊடகத்திற்கு கணக்கில் வராமல் பிளாக்கில் பேக்கேஜ் செலவு செய்ய முடியாத காரணத்தால் மீடியா வெளிச்சத்தில் இருந்து சற்று தள்ளியே நிற்கும் அவலம்

 

வேட்பாளர் செலவு தொகை உச்சவரம்பு அதிகப்படுத்தப்படுமா ?

 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ. 40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனின் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனின் அப்சர்வர்கள் ஒவ்வொரு வேட்பாளரையும் வாகனத்தில் பின் தொடர்ந்து, எவ்வளவு நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, எவ்வளவு பட்டாசு வெடிக்கப்படுகிறது, எவ்வளவு பிட் நோட்டீஸ் விநியோகிக்கப்படுகிறது, எவ்வளவு சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு வாகனங்கள் பயன்படுத்த படுகிறது, டிவி மற்றும் பத்திரிகைகளில் எவ்வளவு விளம்பரங்கள் செய்யப்படுகிறது என்பதை துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.

 

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பல வேட்பாளர்கள் உடன் வருபவர்களுக்கு விலைவாசி ஏற்றம் காரணமாக டீ, சாப்பாடு வாங்கி கொடுத்த கணக்கு காட்ட முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஊடகத்திற்கு வழங்கப்படும் விளம்பரங்கள் மிக மிக குறைந்து விட்டது. இதனால் தேர்தல் கமிஷனுக்கு ‘கண்ணா மூச்சிக்காட்டும்’ வகையில் காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும் பேக்கேஜ் சிஸ்டத்தை கடந்த சில தேர்தல்களாக அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் சுமார் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஒரு வேட்பாளருக்கு செய்தி வெளியிட ஒவ்வாரு டி .வி., சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகள் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

 

முக்கிய கட்சிகள் 2 பேரும் போட்டி போட்டுக் கொண்டு முன்னணி சேனல்கள் மற்றும் முன்னணி பத்திரிகைகளுக்கு மட்டும் பேக்ஜ் சிஸ்டம் மூலம் விளம்பரம் செய்கின்றனர். (அந்தப் பத்திரிகை,ஊடக நிருபர்களுக்கு கவரும் மற்றவர்களை விட அதிகம் ) இதனால் தோராயமாக ஊடகத்திற்கான செலவு மட்டுமே ரூ. 50 லட்சம் முதல் 1 கோடி வரை எட்டுவதாக கூறப்படுகிறது. ஒரு தொகுதியின் வேட்பாளரின் மொத்த செலவு தொகையே 40 லட்சத்திற்குள் தான் இருக்க வேண்டும் என்ற நிலையில் ஊடக செலவு கணக்கே ரூ 50 லட்சத்தை தாண்டுவதாக அரசியல் புள்ளிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த 4 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்த தொழில் அதிபர்களின் ஊடகங்கள் ‘பூமராங்’ போல் தற்போது அரசியல் புள்ளிகளிடம் பேக்கேஜ் சிஸ்டம் மூலம் திருப்பி வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

டிவி., சேனல்கள் மற்றும் பத்திரிகைகளில் வேட்பாளர் குறித்த விளம்பரங்கள் செய்தியாக வெளிவருவதால் இது குறித்து கணக்கு எதுவும் திரட்ட முடியாமல் தேர்தல் கமிஷன் தணிக்கை அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

 

பேக்ஜ் தொகை மிக மிக அதிகமாக உள்ளதால் நடிகர் விஜய்யின் த.வெ.க., சீமானின் நாம் தமிழர், வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஊடகத்திற்கு கணக்கில் வராமல் பிளாக்கில் பேக்கேஜ் செலவு செய்ய முடியாத காரணத்தால் ஊடாக வெளிச்சத்தில் இருந்து சற்று தள்ளியே வருகின்றனர்.

 

இதனால் களத்தில் ஏதோ தி.மு.க., கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணி மட்டுமே உள்ளதாக ஒரு மாய பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக மற்ற கட்சியினரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அட விடுங்கப்பா பல கோடி கருப்பு பணம் 5 வருஷத்துக்கு ஒரு முறை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் செல்கின்றது நல்லது தானே….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.