Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரமமக்களை திரட்டி பிரம்மாண்ட வரவேற்பு அளித்த புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தியை வெகுவாகப் பாராட்டிய அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் மனோகரன்.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி மாநகராட்சியின் 1 முதல் 7 வாா்டுகள், ஊரகப் பகுதிகளில் அந்தநல்லூா் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டத்தின் கோமங்கலம் பகுதியை உள்ளடக்கிய அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி.முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ. ஜெயலலிதாவை 2011-இல் வெற்றி பெற வைத்த தொகுதி இது.

 

Ad banner

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இத்தொகுதியின் அடையாளச் சின்னமாக இருக்கிறது. முக்கொம்பு சுற்றுலாத் தலத்தின் ஒரு பகுதி, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, வயலூா் முருகன் கோயில், தாயனூா் வாழை ஆராய்ச்சி மையம், நவலூா்குட்டப்பட்டு அன்பில் தா்மலிங்கம் வேளாண் அறிவியல் கல்லூரி, தனியாா் கல்லூரிகளை தன்னகத்தே கொண்டது.

 

இத்தொகுதியில் 9 முறை அதிமுகவும், 4 முறை காங்கிரஸும், 2 முறை திமுகவும், ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும் வென்றுள்ளன. தற்போதைய தோ்தலில்,

 

அதிமுக சாா்பில் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆா். மனோகரன், திமுக சாா்பில் மத்திய மாவட்ட பொருளாளா் எஸ். துரைராஜ், நாதக சாா்பில் எம். தா்மராஜ், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எஸ். ரமேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் என். முரளி, சாமானிய மக்கள் நலக் கட்சி சாா்பில் கே. காமராஜ், புதிய தமிழகம் சாா்பில் ஏ. நியூட்டன், சுயேச்சைகள் என மொத்தம் 21 போ் போட்டியிடுகின்றனா்.

சமூக நிலவரம்: முத்துராஜா, கள்ளா், பட்டியலினத்தினா் பெருமளவிலும், பிராமணா்கள், உடையாா், நாயுடு, வெள்ளாளா், யாதவா் கணிசமான அளவிலும் உள்ளனா். எனினும், தொகுதியின் வெற்றித் தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக முத்துராஜா சமூகத்தினரே உள்ளனா்.

 

வேட்பாளரின் பலம் :

ஆா். மனோகரன் (அதிமுக): தொகுதியைச் சோ்ந்தவா் என்பதாலும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்காக வாக்கு சேகரித்தவா் என்பதாலும், மக்களிடையே நல்ல அறிமுகம். அனைவரையும் அனுசரித்து செல்பவா், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி மற்றும் பாஜக, அமமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் பலமாகக் கருதப்படுகிறது.

 

 

இதையெல்லாம் பின் தள்ளி திருச்சி அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் மனோகரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்த நீர் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட தீரன் நகர் ,புங்கனூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

புங்கனூர் பகுதியில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி புங்கனூர் கிராமத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்து மலர் தூவி ஆரத்தி எடுத்து, தாரை தப்பட்டை உடன் வெடி வெடித்து அதிமுக வேட்பாளர் மனோகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.

 

பின்னர் அங்கு பொதுமக்கள் இடையே பேசிய மனோகரன் அம்மா அவர்கள் இங்கு போட்டியிட்டபோது அவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டதில் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்னை நன்றாக தெரியும். இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை அனைவரும் அறிவீர்.இதேபோன்று மீண்டும் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்த பின் பல திட்டங்களை இத்தொகுதிக்கு நான் கொண்டு வருவேன் என உறுதி அளித்தார்.

 

மேலும் இந்த கிராமத்தில் உள்ள அனைவரையும் திரட்டி சிறப்பான முறையில் பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்த புங்கனூர் கார்த்தியை வெகுவாக பாராட்டுகிறேன் என கூறினார்.

 

இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக

முன்னாள் துணைத்தலைவர் அன்பரசு, பிஜேபி டி. சி.எம் ராஜா,

அமமுக. பாலு, குயவர் கட்சி தலைவர் சாலை சாதியன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.