நடிகர் விஜய்க்காக திருச்சி 32 வது வார்டில் ஜெரால்டு மில்டன் தலைமையில் வாக்குகள் சேகரித்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி 32 வது வார்டில் மரியம் நகர், படையாட்சி தெரு, அன்னை நகர் பகுதிகளில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் ,

தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஜெரால்டு மில்டன் தலைமையில் தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று தாகா கட்சியின் தலைவரும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான விஜய்க்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கிழக்கு தொகுதி தற்போது நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது காரணம் நடிகர் விஜய் இத்தொகுதியில் போட்டியிடுவது தான் .

இந்த தொகுதியில் விஜய் நேரடியாக வீதி வீடாக சென்று வாக்கு சேகரிக்க இல்லாவிட்டாலும் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விசில் உடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள் அந்த வகையில் இன்று ஜெரால்ட் மில்டன் தலைமையில் தமிழக வெற்றிக்கு கழக தலைவர் விஜய் அறிவித்துள்ள 10 உத்தரவாதங்களை பொது மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தனர்.இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.

