இல்லம்தோறும் சென்று அதிமுக அரசின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்த திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமரேசபுரம் கொடிமரம், கீழ குமரசரப்பவும் காலனி,மேலகுமரேசபுரம், எழில் நகர் விநாயகர் கோவில், எழில் நகர் சமத்துவக்கூடம் வ.உ.சி நகர் , கணேசபுரம் கடைவீதி திருவேங்கட நகர் ஜெய்நகர் பெல்பூர் பர்மா காலனி கணேசா பாரதபுரம் ஒன்றியங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில்.

அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், நல்லாசி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின்

திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் ப.குமார், அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு இல்லம்தோறும் சென்று வாக்குகள் சேகரித்தார்.தற்போது அதிமுக அரசின் சாதனைகளையும், தற்போது அதிமுக பொது செயலாளர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் பெண்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளையும் எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்வில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜ மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சாந்தி, மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சேர்ந்த நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

