Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம் கே எம் காதர் மைதீனை சந்தித்து ஆதரவு திரட்டினார் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் கூட்டணி கட்சியினருடன் சென்று ஆதரவு திரட்டினாா்.

 

Ad banner

தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, புதுவரவான தவெக உள்ளிட்ட கட்சிகள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

திருச்சி கிழக்குத் தொகுதியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக இன்று சனிக்கிழமை காந்தி மார்க்கெட் தொழிலாளிகளிடம் வாக்குகள் சேகரித்தார்.அப்போது காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம் கே எம் காதர் மைதீன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.அப்போது வியாபாரிகள் சங்கத்தைச் சார்ந்த எம் கே கமலக்கண்ணன்,எஸ் பி பாபு ,வட்ட செயலாளர் செந்தில்,உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்பு பாலக்கரை, தாராநல்லூர், கீழப்புதூர், முதலியார் சத்திரம், வேர் ஹவுஸ், இடத்தெரு, துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி ஒவ்வொரு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகளை சேர்ந்த அரசு,மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,மற்றும் உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.