வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் .

நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் உட்பட்ட பலரை பகுதி 33 வது வார்டு 154 வது பூத் பகுதிகளில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டினர்.
மேலும் விஜய் அறித்து உள்ள வாக்குறுதிகளை பெண்களிடம் எடுத்துக் கூறி விசில் சின்னத்தில் வாக்களிக்க கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

