திருச்சி கருமண்டபத்தில் பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு

கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலை பால் செமினரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தீபன் (வயது 24). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று திருச்சி – திண்டுக்கல் ரோடு கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரே திடீரென மயங்கி விழுந்தார். இவரை மீட்டு நண்பர்கள் கருமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் தீபனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

