திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில்
மது,கஞ்சா லாட்டரி விற்று 8 பேர் கைது.
பணம்,கஞ்சா, மது பாட்டில்கள் பறிமுதல் .
திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர், ராம்ஜி நகர் மில்காலனி, சங்கிலியாண்டபுரம், கருமண்டபம், அரியமங்கலம், ஏர்போர்ட் அன்பில் நகர், உறையூர் பாண்டமங்கலம்,உறையூர் கோணக்கரை பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கஞ்சா விற்றதாக இரண்டு பேரும், லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஒரு நபரும், போதைப்பொருட்கள் விற்றதாக மூன்று பேரும், மதுபான பாட்டில்கள் விற்றதாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேர்களிடம் இருந்து பணம், மது பாட்டில்கள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

