Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தாத்தாவை கத்தியால் குத்திய தாத்தா மீது வழக்கு.

0

'- Advertisement -

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 75 வயது தாத்தாவை கத்தியால் குத்திய 81 வயது தாத்தா.

 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 75). இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 81). என்பவர் கிருஷ்ணமூர்த்தியிடம் மது போதையில் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

பின்னர் கத்தியால் குத்தி உள்ளார். .இதில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது.அவர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதுகுறித்த புகாரியின் பெயரில் ரங்கசாமி மீது எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.