Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனர்.

0

'- Advertisement -

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் .

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 12.3.2026 வியாழக்கிழமை தொடங்கி இன்று 14.3.2026 சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற்றது.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்:-

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் சிறுநீரக சிகிச்சை மற்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கணேஷ் அரவிந்த், சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர். என்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் பங்குபெற்ற நோயாளிகளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கினார்கள்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம், கை கால் வீக்கம், தற்காலிக சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, ரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக தொற்று நோய்கள், அனைத்து சிறுநீரக பிரச்சனைகள் (பாம்பு கடி, விஷ முறிவு, ஜன்னி) சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரத்தம் கலந்து சிறுநீர் கழித்தல், அவசரமாக சிறுநீர் கழித்தல், சிறுநீரக கல் தொந்தரவு, பிராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகள், சிறுநீரக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு இலவச ஆலோசனைகளும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டது.

மேலும் ரூ.1500 க்கு பார்க்கப்படும் சிபிசி, யூரியா கிரியேட்டின், யூரின் ரொட்டின், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், யூ.எஸ்.ஜி அப்டமன், சிறுநீர் பரிசோதனைகள் சலுகை விலையில் ரூபாய் 500 க்கு செய்யப்பட்டது.

மேலும் இம்மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, 24மணி நேர இரத்த சுத்திகரிப்பு மற்றும் லேப்ராஸ்க்கோபி மூலம் டோனர் நெப்ரக்டமி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைகளான ஐ.சி.யு தீவிர சிகிச்சை பிரிவு, சாலை விபத்து பிரிவு, ஆஞ்சியோகிராம் அண்ட் ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டண்ட் பிளேஸ்மெண்ட், இருதய தீவிர சிகிச்சை பிரிவு, பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு, ரத்தக்குழாய் அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் இவைகளுக்கான மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேல் சிகிச்சைக்காக 55 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.