Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்

0

'- Advertisement -

1.திருச்சி பீம நகரில் பத்தாம் வகுப்பு மாணவி மாயம்,போலீசார் விசாரணை.

திருச்சி பீமநகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் லாவண்யா வயது 16 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற லாவண்யா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் ஹெலன் பாலக்கரை போலீசில் புகார் செய்தார் புகாரின்பேரில் பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2. திருச்சியில்
கஞ்சா லாட்டரி விற்ற 2 பேர் கைது .

திருச்சி உறையூர் பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் இதில் உறையூர் பகுதியில் கஞ்சா விற்றதாக மணிகண்டன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாலக்கரை பகுதியில் லாட்டரி விட்டதாக குணா என்கிற குணசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.


3. திருச்சி பாலக்கரையில்
இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் பணம் பறிப்பு .

திருச்சி பாலக்கரை கூனிபஜார் பகுதியை சேர்ந்தவர் மோஷன் (வயது 57) இவர் மேலப்புதூர் ஆர் சி எம் சி கல்லறைத் தோட்டம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார், அப்போது அவரை வழிமறித்து சட்டைப்பையில் இருந்த பணத்தை அப்படி செய்துவிட்டு ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார் இதுகுறித்து பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் வழக்குப்பதிந்து நெல்சன் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.