Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரயில்வே தொழிற்சங்கத் தலைவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

0

பொன்மலை ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு பணி ஒய்வு பாராட்டு விழா

பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் ஷாப் பகுதியில் 40 ஆண்டு பணிபுரிந்துடன்,

எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தில் டீசல் மெக்கானிக்கல் கிளை தலைவரும் மற்றும் தென்னக இரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் தொடந்து 18 ஆண்டு இயக்குநர் ஆக இருந்து, ரயில்வே தொழிலாளருக்கு பல சமூக பணி புரிந்த மணிவண்ணன் அவர்களின் ரயில்வே பணி ஒய்வு விழா மற்றும் வழியனுப்பும் நிகழ்வு பொன்மலை ஆர்மரிகெட் பகுதியில் நடந்தது.

ஆர்.மணிவண்ணன் அவருக்கு தொழிலாளர்கள் பொன்னாடை பேர்த்தி , மலர்மாலைகள், சந்தன மாலைகள், நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி, பாராட்டி சென்றார்கள் .

இவ்விழாவிற்கு தி.மு.க. திருச்சி மாவட்ட விவசாயம் மற்றும் தொழிலாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கோ.ரமேஷ், பொன்மலை பகுதி முன்னாள் தி.மு.க தொழிற்சங்க தலைவர் ராமதாஸ் , எஸ்.ஆர்.எம்.யூ தலைமை கிளை செயலாளரும்,தென்னக இரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தின் இயக்குனர் ஆர்.விஜயகுமார் ,

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், நெடுஞ்செழியன், பாலு, மதி, ஆறுமுகம், ஜீவா, நாகராஜ், திருஞானம், தியாகராஜன், ஆரோக்கியநாதன் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.