திருச்சி மாவட்டம் பழூர் சில்வர்லைன் மருத்துவமனையில் கேத்லேப் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்திய மருத்துவ கழக முன்னாள் தேசிய துணைத் தலைவர் டாக்டர் அஷ்ரப் விழாவில் கலந்துகொண்டு கேத் லேப் மற்றும் ரோபோட்டிக் இதய நிறுவனத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் திருச்சி ரானா மருத்துவமனை டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.செந்தில் குமார் கூறுகையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பலூர் சில்வர்லைன் மருத்துவமனை தனது கவீன 24×7 மேம்பட்ட கத் லேப் (Cath Lab) மற்றும் தென் தமிழ்நாட்டின் முதல் ரோபோட்டிக் இதய நிறுவனம் தொடங்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது பிராந்திய இதய சிகிச்சை துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

24 மணி நேரமும் செயல்படும் இந்த மேம்பட்ட கத் லேப் மூலம் இதயக் குத்து ( Heart Attack ) நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை வழங்க முடியும் என தெரிவித்தார். அவசர அஞ்சியோபிளாஸ்டி, கொரோனரி அஞ்சியோகராம். சிக்கலான அஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் மற்றும் பல்வேறு இதய சாதனங்கள் பொருத்துதல் போன்ற சேவைகள் விரைவாக வழங்கப்படுவதால், உயிர் காக்கும் சிகிச்சையில் ஏற்படும் தாமதம் குறைக்கப்படும் என்றார்.
அவசர மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் நவீன் சுந்தரம் கூறுகையில், புதிய ரோபோட்டிக் இதய நிறுவனம் மூலம் தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக ரோபோட்டிக் உதவியுடன் இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இந்த நவீன தொழில்நுட்பக்கின் மூலம் குறைந்த ரத்த இழப்பு, சிறிய அறுவை சிகிச்சை வெட்டுகள். குறைந்த வலி, மிகக் குறைந்த காயமுறிவு மற்றும் விரைவான குணமடைதல் போன்ற பலன்கள் கிடைக்கும் என விளக்கினார்.
மேலும், சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளின் போது மேம்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு முன் மற்றும் பிந்தைய முழுமையான பராமரிப்பு மூலம் நோயாளிகளின் பாதுகாப்பும். சிகிச்சை வெற்றியும் உறுதி செய்யப்படுகின்றன என்று வலியுறுத்தினார்.
இந்த தொடக்கம் மூலம், மாநகரத் தரமான இதய சிகிச்சை வசதிகளை உள்ளுார் மக்களுக்கு வழங்குவது சில்வர்லைன் மருத்துவமனையின் நோக்கமாகும். இதன் மூலம் தென் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு நுல்லியமான, தாமதமற்ற மற்றும் குறைந்த காயமுறிவுடன் கூடிய சிகிச்சை கிடைக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், திருச்சி மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள சில்வர்லைன் மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அணுகி மாணவர்களுக்கு இதய நின்று போக்கு (Cardiac Arrest) அல்லது அவசர நிலைகளில் உயிர் காக்கும் சிபிஆர் ( CPR-Cardiopulmonary Resuscitation ) பயிற்சியை வழங்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.”ஒவ்வொரு மாணவரும் சிமிஆர் தெரிந்தால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்” என்ற இலக்குடன் இந்த சமூக விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என்றார்.

