Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வியாபாரிகளை ஏமாற்றி கிரிமினலாக பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ் கமிஷனரிடம் வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் புகார்.

0

'- Advertisement -

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க வியாபரிகள் புகார்.

அனைத்து வியாபாரிகள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

திருச்சி வயலூர் ரோடு, பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஆர்.காளிமுத்து தலைமையில் பொருளாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் வியாபாரிகள் நேற்று திரண்டு வந்து திருச்சி மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்கம் பதிவு காலாவதியாகி விட்டது.அதனுடைய சந்தா ரசீது புக் திருட்டு போய்விட்டது. இதனை சிலர் பயன்படுத்தி கடைக்காரர்களிடம் மிரட்டி சந்தா என்ற பெயரில் வியாபாரிகளை ஏமாற்றி கிரிமினலாக செயல்படுகிறார்கள்.

புதுப்பிக்கப்படாத போலியான சங்கம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெறப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்தப் போலியான நபர்கள் பற்றி தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வியாபாரிகளை குழப்பி ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டு வரும் மோகன்ராஜ்,முரளிதரன் ஹோண்டா குமார், கரிகாலன் ரவி, ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் கௌரவ தலைவர் மயில் வாகனம்,மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.