திருச்சி குமரன் நகரில் ஓடும் பஸ்ஸில் துணிகரம். மூதாட்டியின் 31/2 பவுன் செயின் பறிப்பு . பலே திருடன் சிக்கினான்.
திருச்சி சமயபுரம் பி. புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சுலோச்சனா (வயது 69). சம்பவத்தன்று இவர் அல்லித்துறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அல்லித்துறையில் இருந்து வயலூர் ரோட்டில் உள்ள குமரன் நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார், அப்போது தனது கழுத்தில் கை வைத்து பார்த்த போது தான் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் செயினை காணாமல்
திடுக்கிட்டார்.
பஸ் படிக்கட்டில் இறங்கும் போது கூட்டம் நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி அவர் அணிந்திருந்த செயினை பறித்து சென்றது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து சுலோச்சனா தில்லைநகர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார் .அந்த புகாரின் பேரில் தில்லை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் மூதாட்டியின் செயினை பறித்த நபர் எடமலைப்பட்டி புதூர் பாப்பா காலனி பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 45) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து செயினை பறிமுதல் செய்து அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்து உள்ளனர்.

