Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.

0

'- Advertisement -

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் கடையடைப்பு போராட்டம்.திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.

Ad banner

23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,

டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 யில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்,

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு வேலைப் பளுவை திணிப்பதை கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும்,

8 மணி நேரத்துக்கு மேல் பணி புரியும் கடை ஊழியர்களுக்கு கூடுதல் நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்,

பணி இடமாறுதல், மீண்டும் பணி வழங்குதல் ஆகிய செயல்முறை படுத்தும் அதிகாரத்தை முதுநிலை மண்டல மேலாளருக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

டாஸ்மாக் ஊழியர்கள். நாளை புதன்கிழமை முதல் (18.2.26 ) கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. பணியாளர் சங்கம், சேல்ஸ்மேன்கள் சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சென்னையில் கூடி எடுத்த முடிவின்படி திருச்சி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மூடி போராட்டம் நடக்கிறது என கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தெரிவித்துள்ளார். மேலும் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.அதன்படி 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.