Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

125 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கு முயலும் திமுகவை கண்டித்து திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

125 நாள் வேலை உறுதி திட்டத்தை பற்றி அவதூறு பரப்பும் விடியா திமுக அரசை கண்டித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட வையம்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றியம் சார்பில் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சேது,வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.