Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.1.80 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது மருத்துவமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

0

'- Advertisement -

திருச்சி காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.1.80 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது மருத்துவமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி காட்டூர் பகுதியில் ரூ 1. 80 கோடி உயர்த்தப்பட்ட புதிய அரசு பொது மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 37 ,38 ,39 ,42. 43, ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட

காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது சுகாதார மருத்துவமனை வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

இதனையடுத்து தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் ( 2023- 24) ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ரூபாய் 1. 80 போடி மதிப்பீட்டில் அதிநவீன பொது மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

 

இதே போல் அரியமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட உள் அரியமங்கலத்தில் 30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் மற்றும் திருவரம்பூர் மாநகராட்சிக்குட்பட்ட

வ உ சி நகர் பகுதியில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் மற்றும் இதேபோல் பொன்மலைப்பட்டி மாநகராட்சிக்குட்பட்ட ஜே ஜே நகரில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் என 2 கோடியை 80 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற அரசு மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து சிகிச்சைக்காக வந்த மக்களிடம் கோரிக்கைகளை கேட்டதுடன் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகளை பற்றியும் கேட்டறிந்தார் .

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், மண்டல 3-ன் துணை ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராம் மாவட்ட நல அலுவலர் ஹேம்சந்த் காந்தி, மாநகர நல மருத்துவ அலுவலர் சுபாஷ் காந்தி, காட்டூர் மருத்துவ அலுவலர் கார்த்திகேயன்,

காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம்,பொம்பளைப் பகுதி செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் சிவக்குமார் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில், 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே. கே.கே‌ கார்த்திக், உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.