Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருச்சியில் மண்டல அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் வணிக சந்திப்பு

0

'- Advertisement -

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருச்சிராப்பள்ளி.

மண்டல அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் வணிக சந்திப்பு

சுய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் உதவிக்குழுக்களுக்கு (SHGs) சந்தை அணுகலை வலுப்படுத்தவும், நிலையான வருமான வழிகளை உருவாக்க மகளிர் திட்டத்தின் மூலம் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மண்டல அளவிலான (வாங்குவோர் மற்றும் விற்போர்) வணிக சந்திப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்த கொள்முதலாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நேரடியாக உற்பத்தி செய்யும் பொருட்களை கொள்முதல் செய்யக் கூடிய வணிகர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் இந்த மாபெரும் மண்டல அளவிலான வணிக சந்திப்பு நடைபெற்றது.

 

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்கள் கலந்துக்கொள்ளும் மண்டல அளவிலான இவ்வணிக சந்திப்பில் மொத்தம் ரூ.530.40 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களை வாங்கும் நிறுவனங்கள் 750 வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநர்கள், மாவட்ட தொழில் மையம், திருச்சி மாவட்ட சிறு தொழில்கள் மற்றும் நுண் உற்பத்தியாளர்கள் சங்கம், ஹால்மார்க் பிஸினஸ் ஸ்கூல் அறங்காவலர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்நுட்ப வல்லுநர்கள்,

உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் உதவித் திட்ட அலுவலர்கள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர்கள், மாவட்ட வளப் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.