Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நிர்வாகிகளுக்கு கையடக்க பிரிண்டர்கள் வழங்கி AIADMK Connect செயலியை இயக்கும் முறைகள் பற்றி எடுத்துரைத்த திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

0

'- Advertisement -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் விடியா திமுக ஆட்சியில்,

கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு விடியா திமுக ஆட்சிக்கு எதிராக “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து, தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக துவங்கப்பட்டுள்ளது.

 

இதனை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் புத்தூர் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கு கையடக்க பிரிண்டர்கள் வழங்கி AIADMK Connect செயலியை இயக்கும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர், ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு, கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.