Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் எஸ் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட்டு முன்பு

Ad banner

எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கம் சார்பில் எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவு படுத்த வேண்டும் எட்டாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வெளியிடும் வரை ஒன்னு ஒன்னு 2026 முதல் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும்.. அனைத்து கேட்டகிரிகளிலும் உள்ள 2.5 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,

TVK ad

ஆட்குறைப்பு அவுட்சோசிங் தனியார் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ் ஆர் எம் யு துணை பொதுச் செயலாளர் எஸ் வீரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யூ பொன்மலை பணிமனை கோட்டம் மற்றும் அனைத்து கிளை செயலாளர்கள் தலைவர்கள் இளைஞரணி மற்றும் அனைத்து நிர்வாகிகள் ரயில்வே தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பொன்மலை ஆர்மரி கேட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.