Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழக கூட்டத்தில கொடி அறிமுகப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.5 ஆயிரம்.

0

'- Advertisement -

திருச்சியில் இன்று அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழக கூட்டத்தில கொடி அறிமுகப்படுத்தி

தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

 

அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,கொடி அறிமுக விழா மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி திருச்சியில் இன்று நிறுவன தலைவர்,அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்புசாரா மண்பாண்ட தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் தியாகராஜன் திருநீலகண்டர் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் அரியலூர் மாவட்ட தலைவர் மாரியப்பன்,தஞ்சை மாவட்ட தலைவர் அப்பாவு மற்றும் மாநில முழுவதும் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் கொடியை அறிமுகப்படுத்தி,தேர்தல் அறிக்கையை வெளியிட்டு,நிறுவனத் தலைவர் தியாகராஜன் திருநீலகண்டர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

 

தமிழகம் முழுவதும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கட்டாயம் வழங்கப்படும்.தமிழகம் முழுவதும் அடிப்படை கல்வியாக சிபிஎஸ்சி பாடத்திட்டம் 1 முதல் 10ம் வகுப்பு வரை நவீன வசதியுடன் இணையதளம் வாயிலாக அமைக்கப்படும்,

தமிழகம் முழுவதும் விவசாயத் துறையில் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பணி அமர்த்தப்படும்.

அரசு சார்பில் பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் பாத்திர செலவுகள் பாதியாக குறைக்கப்படும்.காவல்துறை மற்றும் நீதித்துறை முற்றிலும் நவீன முறையில் மாற்றி அமைக்கப்படும்

 

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைக்கு நிகராக நவீன வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் அமைத்து தரப்படும்.

தமிழக முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வருடத்தில் தீபாவளி போனஸ் 50 ஆயிரம் வழங்கப்படும், அரசு சார்பில் கல்வி கூடங்களுக்கு தனி பேருந்து வசதி செய்யப்படும், தமிழக முழுவதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் கோவில்களில் வாகனங்கள் நிறுத்தவும் பக்தர்கள் தங்குவதற்கும் கட்டிடங்கள் கட்டித் தரப்படும், பிரசித்தி பெற்ற கோவில்களில் விரைவான தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும், தமிழக முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்,

 

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும், பொதுமக்கள் நலன் கருதி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், மகளிர் உரிமைத்தொகை ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ஆக உயர்த்தி தரப்படும்,

மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு மாதம் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்படும், ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் காய்கறி மார்க்கெட் இல்லாத பகுதிகளில் சுகாதார மேம்பாட்டு வணிக வளாகம் அமைக்கப்படும், என்பது உள்ளிட்ட 51 கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என நிறுவன தலைவர் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.