எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா.அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு.
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்,
ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ராமணி ஏற்பாட்டில்
திருச்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில்,
கழக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் ஆர்.சாருபால தொண்டைமான் ஆகியோர் முன்னிலையில்,
திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு நாளை சனிக்கிழமை
17. 1. 2026 காலை 10 மணி அளவில்
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளார்கள்,

இந்த நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள்,
மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள்,நகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளை, ஊராட்சி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

