Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

0

'- Advertisement -

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு செய்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

 

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தொகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான திருவெறும்பூரில் புதியதாக விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி கோரிக்கை வைத்து வந்தனர் .

மேலும் இதனை அடுத்து இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் வாயிலாக தமிழக நகராட்சி நிர்வாக துறையிடம் திருவெறும்பூர் பகுதியில் புதிய விரிவாக்க பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் எடுத்துரைத்தார் .

இதனை அடுத்து தமிழக முதல்வர் வாயிலாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை இதற்கு ஒப்புதல் வழங்கி ஆறாவது மாநில ஆணையத்தின் கீழ்

2025 – 26 ஆம் நிதி ஆண்டின் கீழ் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ 6 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கபடும் என அறிவித்தார் .

 

இந்நிலையில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது நாளை நடைபெறும் நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .

 

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் வருகை புரிந்து அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மாநகர செயலாளர் மு. மதிவாணன் நகரப் பொறியாளர் சிவபாதம் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் ,உதவி ஆணையர் சரவணன்,

உதவி பொறியாளர் கவிபிரியா, உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன். மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.