Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை மின்வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

0

'- Advertisement -

திருச்சியில் மின்வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கம் மையத்தில் நேற்று முன்தினம்வெள்ளிக்கிழமை அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

திருச்சி பாலக்கரை மேலப்புதூா் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் தரைத்தளத்தில் மின்சார வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், வாகனம் பழுதுபாா்க்கும் மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் மின்சார வாகனத்தின் பேட்டரிக்கு சாா்ஜ் ஏற்றும்போது தீ விபத்து ஏற்பட்டது. கடையில் தீ பற்றியதால் அதன் புகை மேல்தளத்திலுள்ள வீடுகளுக்கும் பரவியது.

இதையடுத்து, கடை ஊழியா்கள் மற்றும் மேல்தளத்தில் இருந்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வினோத் தலைமையிலான தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் மின்சார வாகன விற்பனையகத்தில் பரவியத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இதில், கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்து உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.