குழந்தை இயேசு திருத்தல அதிபர் ஆரோக்கிய சாமியின் கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தி.
Christmas greetings message from Father Arokiasamy, Rector of the Infant Jesus Shrine.
திருச்சி நம்பர்.1 டோல்கேட் குழந்தை இயேசு திருத்தலம் அதிபர் ஆரோக்கிய சாமி அனைவருக்கும் தெரிவித்துள்ள கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும், – டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டா டுகிறோம். ஏன் இந்த விழா மிமிகச்சிறந்த விழாவாக – கொண்டாடப்படுகிறது என்று சிந்திபோம்.
மனித வரலாற்றில், கடவுள் மக்களை காக்க பல அவதாரங்களை எடுத்ததைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் கடவுள் தன் நிலையிலிருந்து சற்று தாழ்ந்து மனித உரு -எடுத்ததில்லை.
நம் ஆண்டாவராகிய இயேசு, சுதனராகிய இரண்டாம் ஆள் நம்மை மீட்பதற்காக மனிதனாக, அதிலும் குறியாக மனித, இறை – இயல்பு கொண்ட வராக பிறந்தார்.
ஏன் பிறந்தார், இறப்ப தற்காக பிறந்தார். எனவே தான் கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
மேலும் உலக வர லாற்றையே கி.மு, கி.பி என்று பிரித்தது கிறிஸதுவின் பிறப்பு என்றால் மிகை யாகாது.குறிப்பாக அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் விழாவாக கிறிஸ்மஸ் அமைகின்றது,. எனவேதான் மதபேதமின்றி குழந்தை இயேசு பாலகனை தரிசிக்க வருகிறார்கள். பல சமயங்களில் அவர்களின் எளிய நம்பிக்கை, அவர்க ளின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறது.

கிறிஸ்து பிறப்பு விழா என்றாலே இது ஒரு மகிழ்ச்சியின் விழா, அமைதி யின் விழா, ஒற்றுமையின் விழா, மனதுக்கு நிறைவு தரும் விழா என்று சொல்லலாம். இயேசு பாலகனின் பிறப்பு நம் அனைவரின் மீட்பின் ஊற்றாக அமைகிறது. எனவே இறை, மனித பிறப்பில் மகிழ்வோம். ஒற்றுமையோடு இயேசு பாலகனின் பிறப்பு விழாவை கொண்டாடுவோம் வாழ்த்துக்களும், செபங்களும் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

