திருச்சியில் இன்று ( 23.12.2025) செவ்வாய் கிழமை சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழா அருட்சகோதரி பரிமளா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அருட் தந்தை மெல்கியோ திருப்பலியாற்றி, கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்.
ஆக்னஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்..புனித சிலுவை கல்லூரி மாணவிகள் மற்றும் சாக்சீடு பணியாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. .
அருட் சகோதரி. ஜெயசீலி பிரியா மற்றும் சசி ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். 
நிகழ்ச்சியில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முடிவில் அனைவருக்கும் நல்லாங்காள் நன்றி கூறினார்.

