Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநகராட்சி கமிஷனரிடம் எஸ்.பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு.

0

'- Advertisement -

பஜார் வியாபாரிகள்

Ad banner

திருச்சி மாநகராட்சி

அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் எஸ். பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு.

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலனை இன்று சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது ;-

திருச்சி பஜார் தெப்பக்குளம் எதிர்ப்புறத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பர்மா

அகதிகளுக்கும் மாற்று திறனாளிகளுக்கும் கடை ஒதுக்கப்பட்டு அந்த கடைகளை மேற்படி நபர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை செலுத்தி வணிகம் செய்து வருகின்றனர். திடீரென்று இன்று காலை கடையின் முன்புறம் அமைத்துள்ள கூரையை எடுப்பது என்ற கோணத்தில் வணிகம் செய்யும் கடைகளுக்கும் வணிகர்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டார்கள். எனவே ஆணையர் இதில் தலையிட்டு வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் வணிகம் செய்ய கடையின் முன்புறம் மூன்று அடி வரை வெயில் மற்றும் மழை காலங்களில் பொருட்களை பாதுகாத்துக் கொள்ள கூரை அமைக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

 

மனு கொடுக்கும் போது மாவட்ட பொருளாளர் அப்துல் ஹக்கீம், மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் கோபால் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் மைதீன் மற்றும் பர்மா பஜார் வியாபாரிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.