Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அவருக்கு தர வேண்டும், இவருக்கு தர வேண்டும் எனக் கூறி வசூல் மழையில் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் .

0

'- Advertisement -

தமிழகத்தில் அதிகம் பணம் (லஞ்சம்) புலங்கம் இரண்டாவது இடம் என ஒரு கணக்கெடுப்பில் கூறப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அடிக்கடி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம்.

இந்த வகையில் இன்று கூட திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அவரின் உதவியாளர் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

 

இந்த நிலையில்  திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (TN 81) போக்குவரத்து அலுவலர் பணியிடம் மாற்றி சென்றுவிட்டார் . அவரது உதவியாளரும் இல்லை. தற்போது அந்த பொறுப்பில் வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் ஹரி ராமச்சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார் .

தினமும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பணிக்கு வரும் இவர் காலை 10 மணி முதல் மாலை 5 .45 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும் ஆனால் காலை 10 மணிக்கு மேல் பணிக்கு வரும் இவர் மாலை 3.15 மணிக்கு தனது சொந்த ஊர் கிளம்பி சென்று விடுவார் வட்டார போக்குவரத்து அலுவலரின் அரசு வாகனத்தில் (அரசு ஓட்டுநரை ஓட்டக் கூறி திண்டுக்கல் சென்று காலையில் அழைத்து வந்து மாலையில் சென்று திரும்பி விட வேண்டும் ) என கூறப்படுகிறது .

தற்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிட மாறுதலில் சென்று விட்டதால் அவருக்கும், அவரது உதவியாளர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோருக்கு நீங்க தரும் பணம் பிரித்து அனுப்பப்படும் எனக் கூறி கரார் வசூலில் ஈடுபட்டு வருகிறாராம் .

 

நேர்மையான அமைச்சரான போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தாமதமாக பணிக்கு வந்து , சோதனைக்கு என்ற பெயரில் அரசு வாகனத்தை தவறுதலாக உபயோகப்படுத்தியும், இவருக்கு அவருக்கு என கட்டாய வசூலிலும் ஈடுபட்டு வரும் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் ஹரி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.