Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மூலம் பள்ளி மாணவிகளுக்கான தகவல் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி மற்றும் கணினி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

'- Advertisement -

பள்ளி மாணவிகளுக்கான தகவல் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி மற்றும் கணினி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மூலம் இரண்டாம் ஆண்டு முதுகலை அறிவியல் தகவல் தொழில் நுட்பத் துறை மாணாக்கர்கள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் கணினி பயன்பாடு குறித்தும் விளக்கம் பற்றிய நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி உலக மீட்பர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடத்தினர் .

Ad banner

விரிவாக்க துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாய ராஜ் சே ச தலைமையில் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி ஜெயராணி மற்றும் தலைமை ஆசிரியை அருட் சகோதரி ஆரோக்கிய மேரி தமது முன்னிலை உரையில் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி தகவல் தொழில் நுட்பவியல் துறை மாணாக்கர்கள் ஏழை எளிய மாணவிகளுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவியலையும் கணினி பயன்பாட்டையும் பயிற்சி அளிப்பதை நன்றி கூறி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் திருச்சிராப்பள்ளி ரோட்டரி சங்கம் சக்தி தலைவர் சூசன் செரியன் கல்லூரியோடு இணைந்து ரோட்டரி சங்கமும் ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு அளிப்பதில் பெருமை கொள்வதையும் வாய்ப்பினையும் அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு அழைப்போம் என்று உறுதியளித்தார் .

முன்னதாக விரிவாக்கத் துறையின் ஒருங்கிணைப்பாளர் லெனின் உயர்கல்வியின் நோக்கமான தான் சார்ந்த சமூகத்திற்கு கல்வி பொருளாதாரம் சுகாதாரம் சுற்றுச்சூழல் வாழ்வாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியை பெற்று அச் சமூகம் முன்னேற உதவுவது சமூக மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை கல்லூரி 40 ஆண்டு காலமாக திருச்சி புதுக்கோட்டை கரூர் மாவட்டங்களில் 96 கிராமங்களில் சேவை புரிந்து வருவதையும் திருச்சி நகரத்தில் குடிசைவாழ் பகுதிகளில் 22 என தேர்ந்தெடுத்து பணி செய்து வருவதை கூறி இப்பள்ளி ஏழை எளிய மாணவிகளுக்கு தகவல் தொழில்நுட்ப தும் கணினி அறிவியலின் தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று தொடக்க உரை யாற்றினார்.

 

மேலும் இக் கல்வி நிறுவனத்தின் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி வனஜா கலந்து கொண்டார் .

 

கல்லூரி மாணவ மாணவிகள் கணினியின் பயன்பாடு தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி கணினியை பயன்படுத்தும் முறையும் ஒளி படக்காட்சி மூலமாகவும் பயிற்சியாக வும் கணினிகளை பயன்படுத்தியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தனர்.

 

 

கல்லூரி மாணவ மாணவிகளின் குழு தலைவர்கள் ஷாலினி ஸ்டாலின் நந்திதா நிவேதா முஸ்கான் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இக்கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் .

 

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.