மது பாட்டில்களை திரும்ப பெற வேறு ஆட்களை நியமிக்க வலியுறுத்தி திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முற்றுகை
திருச்சி மண்டல மேலாளர் அலுவலகத்தை
முற்றுகையிட்ட
டாஸ்மாக் பணியாளர்கள். மது பாட்டில்களை திரும்ப பெற வேறு ஆட்களை நியமிக்க வலியுறுத்தி மனு.
சென்னை
உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்தில் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில்
திரும்ப வழங்கும் ஒரு பாட்டிலுக்கு
ரூ. 10 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் அமுல்ப் படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நாளை முதல் திருச்சி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில்
மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏற்கனவே டாஸ்மாக் பணியாளர்கள் ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பனிச்சுமையில் உள்ளனர். இதனால் பாட்டில்களை திரும்ப பெற்று அதை முறையாக எங்கு அடுக்கி வைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
மேலும் ஒரு மதுபான கடையில் வாங்கும் மது பாட்டிலை அதே கடையில் கொடுத்தால் தான் திரும்ப பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை மதுபான பிரியர்கள் சரிவர கடைபிடிப்பார்களா என சந்தேகம் உள்ளது.
ஆகவே மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு வேறு ஆட்களை நியமிக்க வேண்டும்.மது பாட்டில்களை வைப்பதற்கு என்று ஒரு தனி இடமும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த முற்றுகை போராட்டம் காரணமாக டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

