Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பத்திரிகையாளர்கள் ஒற்றுமையாக இருந்தால் சீமான் போன்ற தரங்கெட்ட அரசியல்வாதிகள் உருவாக மாட்டார்கள் .

0

'- Advertisement -

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைசட்டமன்றத் தேர்தலை  முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் வில்லியனூர் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று (23-11-25) நடைபெற்ற பின்னர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

அப்போது அவர், ‘எஸ்.ஐ.ஆரை கொண்டு வரும் மம்தா பானர்ஜி எதிர்த்து மக்களை திரட்டி பேரணி நடத்தினார். அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் யார் இருக்கிறது?. பூத் லெவல் ஆபிசரை போட்டது யார்?. திமுக தானே?’ என்று ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் தானே நடத்துகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

 

உடனே ஆவேசப்பட்டு எழுந்து நின்ற சீமான், ‘உனக்கு என்ன தம்பி பிரச்சனை? டேய், அரசு தேர்தல் ஆணையத்தை கேட்கிறதா? தேர்தல் ஆணையத்தை, அரசு கேட்கிறதா? முதலில் உனக்கு என்ன பிரச்சனை? இங்கே தள்ளி வா… காமெடி பன்னிட்டு அலையாதீங்க…’ என்று கோபமாகப் பேசினார். அப்போது, நீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டிருக்கிறதே? என அந்த செய்தியாளர் குறுக்கே கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான், ‘நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம் என்று வழக்கு போட்டார்களா?’ என்று கூறி அந்த செய்தியாளரை நோக்கி, ‘உன்னை இன்னைக்கு இல்ல, ரொம்ப நாளா பார்க்கிறேன். உனக்கு எதாவது பைத்தியம் ஆகிடுச்சா? கேள்வி கேள்வியா கேளு’ என்று கோபப்பட்டு பேசினார்.

 

அதற்கு அந்த செய்தியாளர், ‘மரியாதையா பேசுங்க..’ என்று கூற உடனே சீமான், ‘டேய் நீ முதல்ல, மரியாதையா கேள்வி கேளுடா.. கேள்வி கேட்க வேணாம் நீ முதல்ல போடா. ஒரு மைக்கை தூக்கிட்டு கேமரா எடுத்துட்டு வந்தா பெரிய வெங்காயமாடா?. ஆளையும் முகரையும் பாரு போடா’ என்று ஒருமையில் அநாகரிகமாகப் பேசினார்.

 

அதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற முற்பட்ட அந்த நிருபரை நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சரமாரியாக தாக்கி எங்க தலைவரிடம் இப்படி கேள்வி கேட்டால் தீர்த்துக்கட்டி விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் .

 

பின்னர் தாக்குதலுக்குள்ளானவர் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார் . நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் தொண்டர்கள் மீதும் , அநாகரீகமாக பேசிய சீமான் மீதும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

சீமான் நடந்து கொண்ட விதம் குறித்து திருச்சியில் உள்ள மூத்த பத்திக்காளர் ஒருவரிடம் கேட்டபோது:

 

பத்திரிகையாளர்கள் இடையே தற்போது ஒற்றுமை கிடையாது. ஒரு நிருபருக்கு பாதிப்பு என்றால் இவர் அந்த சங்கத்தை சேர்ந்தவர் அதனால் நாம் இவருக்கு ஆதரவாக சொல்லக்கூடாது இவர் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர் அதனால் நாம் சொல்லக்கூடாது என முடிவெடுக்கப்படுகிறது . அதுவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல சங்கங்கள் முளைத்துவிட்டது . சங்கம் என்பது பத்திரிகையாளர்களை பாதுகாக்க தான் . இதில் அந்த சங்கத்தை சேர்ந்த இந்த சங்கத்தை சேர்ந்தவர், இவர் தொலைக்காட்சியை சேர்ந்தவர் , இவர் பத்திரிகையை சேர்ந்தவர் இவர் youtubeபை சேர்ந்தவர் , இவர் வெப்சைட்டை சேர்ந்தவர் இவர் வார பத்திரிக்கை இவர் மாத பத்திரிகை என பிரித்துப் பார்க்கப்படுவது தான் சீமான் போன்று சில அரசியல்வாதிகள் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர் .

 

மைக்கை எடுத்துக் கொண்டு கேமராவை எடுத்து வந்தால் நீ பெரிய வெங்காயமாடா? என ஒரு நிருபரை கேட்டவுடன் அனைத்து நிருபர்களும் மைக்கை எடுத்து வெளியே சென்றிருந்தால் பத்திரிகையாளர்களின் ஒற்றுமையும் பலமும் சீமான் போன்றோருக்கு தெரிந்திருக்க கூடும் …

 

எந்த ஒரு தொலைக்காட்சியும் ஒரு அரசியல்வாதியின் செயல்பாடுகளை வெளி உலகத்திற்கு கூறாவிட்டால் அவர்களது வளர்ச்சி அத்தோடு சரி. அனைத்து கட்சியினரின் வளர்ச்சியும் பத்திரிகையாளர்கள் கையில் தான் உள்ளது என்பது தற்போதைய பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் போய்விட்டது .

 

சில வருடங்களுக்கு முன்பு திருச்சி எஸ் ஆர் எம் ஹோட்டலில் ப விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் அனைத்து பத்திரிகையாளர்களும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்து வெளியேறி சென்றனர் . அப்போது வந்த விசிக கட்சி பிரமுகர் தலைவரின் பேச்சுக்காக தமிழகமே காத்திருக்கிறது நீங்கள் இப்படி புறக்கணித்து போகலாமா என கேட்டார் . அதற்கு உங்கள் தலைவர் பேச்சுக்காக தமிழகமே காத்திருக்கலாம் உங்கள் தலைவருக்காக பத்திரிகையாளர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி அனைத்து பத்திரிக்கையாளர்களும் வெளியேறினர் . பின்னர் அவரது பேட்டி அவரது தொலைக்காட்சியில் மட்டுமே வந்தது.

 

இப்போது டிஆர்பி ரேட்டிங் என்பதால் என்பதால் அந்த தொலைகாட்சியில் வரும் முன் நம் தொலைக்காட்சிக்கு அந்த செய்தி வர வேண்டும் என போட்டியால் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டு சென்றாலும் மற்றவர் அதனை எடுத்து ஒளிபரப்பி விடுவார் என்பதால் அனைவரும் அந்த இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர்க்க எந்த பத்திரிக்கையாளரும் ஒரு நிருபருக்கு அவமானம் என்றால் அனைவரும் உடனடியாக அங்கிருந்து கிளம்பி நமது ஒற்றுமையை நிரூபித்தால் இது போன்ற நாகரிகமற்ற அரசியல்வாதிகள் உருவாக மாட்டார்கள் என அந்த மூத்த பத்திரிகையாளர் கூறினார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.