திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட நான்கு பேர் கைது.
சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார். கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (வயது 32) என்பவர் கடந்த 30 ந்தேதி
சென்னையிலிருந்து தனது உறவினர் கொடுத்த 60 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார்.
அப்பொழுது திருச்சி ரெயில் நிலைய நடைமேடையில் வந்து இறங்கும் பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தங்களை காவல்துறை ஸ்பெஷல் போலீஸ் என்று சொல்லி தன்னிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு சென்றதாக திருச்சி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்று ரயில்வே போலீசார் விசாரித்ததின் பேரில் சம்பவம் உண்மை என தெரிய வந்தது. மேலும் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி ரெயில்வே போலீசார் ஜான்சன் கிரிஸ்டோ குமார் (வயது 43)
தீனதயாள் (வயது 37) மற்றும்
ரஞ்சித் (வயது 40)
ராஜேந்திரன் (வயது 45) என்ற திருவெறும்பூரைச் சேர்ந்த இரண்டு நபர்களையும் மொத்தமாக நான்கு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்,
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

