Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு .

0

'- Advertisement -

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது வாக்குவாதம் :

 

திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு .

 

அதிமுக வினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

 

 

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது திருச்சியில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுக நிர்வாகியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால்,

,ஆத்திரமடைந்த அதிமுகவினர் கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட நத்தர்ஷா பள்ளி வாசல் அருகே வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டன அப்போது வாக்குச்சாவடி அலுவலரின் அருகாமையில் திமுகவினர் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை முன்னாள் மாவட்ட செயலாளர் இலியாஸ் இங்கே கட்சிக்காரர்களுக்கு என்ன பணி என கேட்டார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இலியாஸ் காவல்துறையின் 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருதரப்பும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

இந்த நிலையில் இன்று திமுக நிர்வாகி ஒருவர்  அமைச்சரின் உதவியாளர் சேகர் அருண் கூறியதாக ( அருண் பெருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ) இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரிடம் இலியாஸ் மீது வழக்கு பதிவு செய்ய வற்புறுத்தி உள்ளார் .

..

திடீரென அமைச்சர் உதவியாளரின் பெயரை கூறி  வற்புறுத்திய காரணத்தினால்

அதிமுக பிரமுகர்

இலியாஸ் கோட்டை போலீஸாரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த அதிமுகவினர்

இன்று மாநகராட்சி 14 வார்டு கவுன்சிலரும் , அம்மா பேரவை மாநில துணை செயலாளருமான அரவிந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விரைந்து சென்று கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் அப்பாக்குட்டி, அம்மா பேரவை ஒத்தக்கடை மகேந்திரன், SMT மணிகண்டன், வட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார் ராஜ்மோகன், கதிர்வேல்,முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, வழக்கறிஞர கங்கை மணி , மகாதேவன், கல்லுக்குழி சுந்தர் , உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதை அடுத்து அதிமுக நிர்வாகி இலியாசை போலீசார் விடுவித்தனர்.

 

பின்னர் அனைவரும் காவல் நிலையம் முன்பு இருந்து கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால கோட்டை காவல் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.