திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் தேங்கியுள்ள சாக்கடை நீரால் பொதுமக்கள் கடும் அவதி .
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கல் : பொதுமக்கள் அவதி.
திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதி தற்போது சாக்கடை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.
சாலையோரம் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது சாலையில் சேறு பிசைந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுக்கள் பெருகி வருகின்றன. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தினசரி வேலைக்கு செல்லும் மக்கள் கடுமையான துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை நீரை வடிகட்டி, கொசு உற்பத்தியைத் தடுத்து, நோய் வரும் முன் காக்க வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம், மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

