Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கோயிலில் பணி புரியும் ஒரு ஊழியர் கோயில் நந்தவனத்திலேயே பட்டப் பகலில் பெண்ணுடன் உல்லாசம் .

0

'- Advertisement -

திருச்சி திருவெள்ளரை கோயிலில் பணி புரியும் ஒரு ஊழியர் நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு கோயில் நந்தவனத்திலேயே செய்த செயல், கோயில் எல்லைகளை தாண்டி முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது திருவெள்ளறை புண்டரிகாஷ பெருமாள் கோயில். 1300 வருடங்கள் பழமையான இந்த கோயிலில் திருமங்கையாழ்வார்யால் மங்கள சாசனம் செய்து 24 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குதான் சஷ்டி கிணறு அற்புதமான கட்டிட அமைப்பு இங்குதான் உள்ளது.

கோயில் மேறேபார்வையாளர் சுரேஷ் என்பவர் பட்டப் பகலில் தரிசனத்திற்கு வந்த பெண் பக்தருடன் கோயில் நந்தவனத்தில் தகாத முறையில் நடந்து கொண்டு ஆபாச வீடியோ வெளியாகி பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது எனக்கு 53 வயதாகிறது திருமணம் ஆகவில்லை. நான் இதற்கு முன் எந்த தப்பிலும் ஈடுபடவில்லை. இந்த கோவிலில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் அவரை பணியிட மாற்றம் செய்துள்ளார். மேலும் அவர் தொடர்பான வீடியோ தொகுப்புகள் ஆதாரங்கள் கிடைத்தவுடன் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என குறிப்பிட்டு இருந்தார்.

 

இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆபாச வீடியோ சமூக ஊடகங்களும் வெளியானதை அடுத்து,

 

இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் நேற்று இரவு திருவெள்ளறை கோவில் பணியாளர் சுரேஷ் என்பவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.