திருச்சி எல்பின் முன்னணி ஏஜென்ட் கைது .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணியில் வசித்து வருபவர் பால்ராஜ் என்பவை மகன் மணிகண்டராஜன் (வயது 37) .
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட எல்பின் நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன் முகவராக செயல்பட்டு பலரையும் ஏமாற்றியதாக மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால்
குற்ற எண் 3/22. பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார்..
இந்த நிறுவனத்தில் அவரது தந்தை உயர் முகவராக செயல்பட்டு( டாப் லீடர்) குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
மணிகண்டராஜன் எல்பின் உரிமையாளர்களை ( ராஜா என்னும் அழகர்சாமி, அவரது சகோதரர் எஸ் ஆர் கே ரமேஷ்) நம்பி ஏமாந்து தற்போது அனைத்து பணத்தையும் இழந்து கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் எல்பின் உரிமையாளர்கள் இந்த வழக்கில் மணிகண்ட ராஜனுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்களுக்கு செலவு செய்து ஏற்பாடு செய்யாவிட்டால் தான் ஆப்புருவராக மாற உள்ளதாக தனது நண்பர்களிடம் கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் எல்பின் உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷ் நம்மிடம் தொடர்பு கொண்டு பேசியபோது யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஒரு போதும் கிடையாது . சில நன்றி இல்லாத நபர்களின் தூண்டுததால் சிலர் அவசரப்பட்டு பொய் புகார்களை அளித்து நிறுவனத்தை தடுமாற செய்து விட்டனர் .
நாங்கள் (எல்பின்) முதலீட்டாளர்களுக்கு தர வேண்டியதற்கு மேலான மதிப்பீட்டிலான சொத்துக்களை காவல்துறையினர் முடக்கி வைத்துள்ளனர் . விரைவில் வழக்கில் எங்கள் தரப்பு நியாயங்களை நிரூபித்து சொத்துக்களை மீட்ட பின்பு அனைத்து முதலீட்டாளர்களுக்கும் செட்டில்மெண்ட் செய்யப்படும் என உறுதியாக கூறினார் .