மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற திருச்சி புறநகர் தெற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் விரோத ஆட்சியை விளக்கி தெருமுனை கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 30.8.2025 அன்று தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அஇஅதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய ஆலோசனை படி,
அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள்,
வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள்
இளைஞர் இளம்பெண்கள் பாசறை,
விளையாட்டு வீரர்கள் அணி,
மாணவரணி
ஆகிய அமைப்புகளை மேலும் வலிமையாக்கும் பணி,
தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் செயல்பாடுகளை அனைத்து சமூக வலைதளங்களுக்கும் விரிவுபடுத்துதல்,
கட்சி அரசின் சாதனைகளையும், விடியா திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை பற்றி விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது,
கட்சி வளர்ச்சி பணிகள்,
ஆகியவை குறித்த ஆலோசனைகளை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையேற்று வழங்கினார்.
அதுசமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ் எம்..பாலன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சி.சின்னசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் மண்டல தகவல் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் எ.டி.சதீஸ், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித் குமார், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பிரியா மற்றும் மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழக செயலாளர்கள் என்.சேது, இராவணன், கண்ணூத்து பொன்னுச்சாமி, அன்பரசன், எல்.கே.டி.கார்த்தி, எம்.அருணகிரி, நகர கழக செயலாளர்கள் பவுன் ராமமூர்த்தி, பொன்னி சேகர், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் செயலாளர்கள் ஜெயசீலன், ஜேக்கப் அருள்ராஜ், பிச்சை பிள்ளை, பொதுக்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், சாந்தி, Iவிஜயா, சார்பு அணி செயலாளர்கள் அம்மா பேரவை எஸ்.ராஜமணிகண்டன், இளைஞர் அணி, வி.டி.எம்.அருண் நேரு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மாணவர் அணி அழகர்சாமி, இலக்கிய அணி முருகன், வர்த்தக அணி எத்திராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு காசிராமன் உள்ளிட்ட மாவட்ட கட்சி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.