Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிசாமியின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திருச்சியில் தொடங்கும் என மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு .

0

'- Advertisement -

 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, 23.8.2025 முதல் 25.8.2025 வரை, திருச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்றத் தொகுதி வாரியாக, ‘புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்’ – தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

 

23.8.2025 – சனி – திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி

 

24.8.2025 – ஞாயிறு -மணச்சநல்லூர், துறையூர், முசிறி

 

25.8.2025 – திங்கள் – மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம்

 

எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.

 

எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சிப் பயணத்தின்’ போது சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி, மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.