Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புங்கனூர் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள ஓர் மின் கம்பத்தை மாற்றி வைக்க ரூ.2 லட்சம் கேட்ட செயற்பொறியாளர் அசோக் அதிர்ச்சியில் எழை விவசாயி பரிதாப பலி .

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வந்தார். அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு முறைப்படி பணமும் கட்டி விட்டார் .

இதனைத் தொடர்ந்து அவரின் வீட்டு அருகே இரண்டு போஸ்ட் கம்பங்கள் நடுவே இவர் கட்டி வரும் புதிய வீட்டினின் அருகே புதிய மின் கம்பம் 4 மாதங்கள் முன்பு யாரும் இல்லாத நேரத்தில் நடப்பட்டது . அந்த இரண்டு கம்பங்களில் ஒன்று சரிந்து இருந்தது அதனை சரி செய்யாமல் புதிதாக கட்டி வரும் வீட்டின் மேலே மின் ஒயர்கள் சென்று நேராக உள்ள போஸ்ட் கம்பத்தில் இணைக்கப்பட்டது.. இதனால் வீட்டில் மேலே ஒட்டும் பணி கூட செய்ய முடியாத அளவில் மின் வயர்கள் சென்றது.

 

சில அடிகள் மின்கம்பங்களை மாற்றி தாருங்கள் என இடத்தின் உரிமையாளர் பலமுறை மின்வாரியம் சென்று முறையிட்டும் எந்த பயனும் இல்லை . முன்னதாகவே மின் இணைப்பு கேட்டபோது ரூ.5000 கையூட்டு பெற்றுக் கொண்டுதான் இந்த மின் கம்பம் நடப்பட்டது . தற்போது இந்த மின்கம்பம் சற்று நகற்றி வைக்க ரூ.15,000 தர வேண்டும் என்று மின்வாரியா அலுவலகத்தில் கூறியுள்ளனர்.

 

இதனை அறிந்த புங்கனூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக முன்னாள் கவுன்சிலரான கார்த்தி சில நாட்களுக்கு முன் மின்வாரிய அலுவலகம் சென்று கேட்டுள்ளார் . அவர்கள் ஏஇ அசோக் குமாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர் . அவரை தொடர்பு கொண்டு பேசியபோது எதற்காக மீண்டும் பணம் தர வேண்டும் இது உங்கள் தவறு தானே சரி செய்து தாருங்கள் எனக் கூறிய போது யாராயிருந்தாலும் தர வேண்டியதை தந்தால் தான் வேலை நடக்கும் நீ சாதாரண அதிமுக கவுன்சிலர் அதுவும் முன்னாள் கவுன்சிலர் உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள் என தெனாவட்டாக பேசிய பொறியாளர் அசோக் குமார் அப்பொழுது

விவசாயி சுப்பிரமணியனுக்கு ரூ.1,81,030 பணம் கட்டினால் தான் இந்த போஸ்ட் மரத்தை மாற்றி அமைக்க முடியும் என மின்வாரியத்தில் இருந்து அவருக்கு கடிதம் வந்தது . இதைப் பார்த்த சுப்பிரமணியனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டும் வந்தாலும் பார்ப்பவர்களிடம் எல்லாம் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் எப்படி இரண்டு லட்ச ரூபாய் இபிக்கு கட்ட முடியும் . இந்த பணம் இருந்தால் நான் மேலே ஒட்டி விடுவேன் என்றவாறு புலம்பி வந்துள்ளார் .

 

இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்த நிலையில் மின் வாரியம் அனுப்பிய கட்டணத்தைக் கண்டு சுப்பிரமணியன் அதிர்ச்சியிலும் மன உளைச்சலும் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் புங்கனூர் கிராம மக்களிடையே அதிர்ச்சியும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது .

 

இவரது உயிர் இழப்புக்கு மின்சார வாரியம் பொறுப்பேற்று தகுந்த நிவாரண  தொகையும் இழப்பீடும் வழங்கி அவரது கடைசி ஆசையான அந்த இல்லத்தை கட்டி முடிக்க முன் வரவேண்டும் என புங்கனூர் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  ( செயற்பொறியாளர் அசோக் குமார் தற்போது  திருவெறும்பூர் மின்வாரிய அலுவலகத்திற்கு மாற்றுதால் ஆகி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது )

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.