Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அநாகரிகமாக பேசிய தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை கண்டித்து திருச்சியில் அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் கடந்த 25-ந் தேதி திருவாரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு பணியினை மேற்கொண்டார். அப்போது பயணிகள் ஓய்வறையில் கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை எனக்கூறி பொதுமக்கள், பிறத் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில், பணியில் இருந்த நிலைய அதிகாரியை அநாகரீக முறையில் பேசியதை கண்டித்தும் இதனால் நிலைய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட மனஉளசைச்சல் காரணமாக ஒட்டு மொத்த நிலைய மேலாளர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்க திருச்சி கோட்டம் சார்பில் இன்று புதன்கிழமை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Ad banner

ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்க திருச்சி கோட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்க மண்டல தலைவர் பழனிவேல், முன்னாள் கோட்ட செயலாளர் சுந்தரம், டி.ஆர். இ.யு திருச்சி கோட்ட தலைவர் சிவக்குமார், திருச்சி கோட்ட செயலாளர் கரிகாலன், உதவி கோட்ட தலைவர் ஜாய் சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.