பொன்மலையில்

காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
போலீசார் விசாரணை .
திருச்சி செந்தண்ணீர் புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . இவரது மகன் ரஷீத் அகமது (வயது 28) காதல் திருமணம் செய்து கொண்டவர். இவருக்க்கு
தனபிரியா ( வயது 25) என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று குடும்பத்தகராறில்
மனைவி
தனப்பிரியா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ரஷீத் அகமது நேற்று வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

