Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாமனார் தொல்லையால் இளம் பெண். தற்கொலை . போலீசார் விசாரணை .

0

'- Advertisement -

திருச்சி திருவானைக்கோவில் IOB பின்புறம் உள்ள தெருவில் வசித்து வந்தவர் கீர்த்தனா (தென்னூர் பாரதி நகர் சேர்ந்தவர் . (வயது 24). கணவர் பெயர் விக்னேஸ்வரன் தனியார் ஆயில் மிலில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தவர் .

 

கீர்த்தனாவின் மாமனார் பெயர் சண்முகம் மாமியார் பெயர் சரசு. கீர்த்தனா – விக்னேஸ்வரன் இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது.

 

இந்த ஆறு வருட காலமாக மாமனார் சண்முகம் தூண்டுதலின் பேரில் . கணவன் மனைவி இருவருக்கும் தினந்தோறும் சண்டை நடைபெற்று வந்துள்ளது . இவர்களுக்கு 5 வயது, நான்கு வயதில் குழந்தை ஆண் குழந்தைகள் உள்ளது . ஆறு வருடங்களாக கணவர் கீர்த்தனாவை தினந்தோறும் குடிபோதையில்  அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் .

 

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை  மாலை ஆறு முப்பது மணி அளவில் நான் கேட்ட வரதட்சணை கொடுக்க முடிந்தால் இங்கு இரு இல்லையென்றால் செத்து விடு என மாமனார் மாமியார் ஆகியோர் கீர்த்தனாவிடம் கூறியுள்ளனர்.

 

தனது கணவர் மாமனாரின் பேச்சைக் கேட்டு குடிபோதையில் நம்மை துன்புறுத்துவதும் மாமனார் மற்றும் கணவனின் தொந்திரவால் செத்துவிடலாம் என மிகுந்த மன உளைச்சலுக்கான கீர்த்தனா நேற்று  மாலை 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.