Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் கொலை நடந்து சீல் வைக்கப்பட்ட பாரை மீண்டும் திறக்கக் கூடாது. அமமுக சார்பில் கலெக்டரிடம் மனு

0

'- Advertisement -

புதிதாக மதுபான கடை திறக்கக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனு.

 

Ad banner

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில் நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 

உறையூர் பேருந்து நிலையம் அருகே வரவிருக்கும் மதுபான விடுதி மனமகிழ் மன்றத்தை தடுத்து நிறுத்தக் – கோரி.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, இக் கோரிக்கை மனுவை அளிக்கின்றோம்.

 

உறையூர் பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே ஒரு மதுபான விடுதி செயல்பட்டு வந்தது.

 

அப்பொழுது, மது போதையில் ஏற்பட்ட தகராறில் மதுபான விடுதியிலேயே, ஒரு படுகொலை நிகழ்ந்து, மதுபான விடுதியை அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மூடப்பட்டது.

 

அதே இடத்தில் திரும்பவும் மதுபான விடுதி திறக்கப்பட போவதாக கேள்விப்பட்டு, உறையூர் பகுதி மக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

 

ஏற்கனவே போதையால் நடந்த கொலையில், இரண்டு குடும்பங்கள் நிற்கதியாகியுள்ள சூழ்நிலையில், அதே இடத்தில் மதுபான விடுதி கொண்டு வருவது என்பது பொதுமக்களுக்கு பெரும் அநீதி இழைப்பதாகும்.

 

எனவே தயவுசெய்து, தாங்கள்   தலையிட்டு, அப்பகுதியில் மதுபான விடுதியோ, மனமகிழ் மன்றமோ புதிதாக திறக்க விடக்கூடாது என திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் ஆலோசனையின் பேரில், உறையூர் பகுதி கழகம் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.”

என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.