Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறந்தபின் மாநகர பஸ் சேவையில் மாற்றம்

0

'- Advertisement -

திருச்சி மாநகரப் பேருந்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.

 

பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு இந்த மாற்றம் நிகழும். புதிய பேருந்து நிலையத்தை மே 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கும்பகோணம் கோட்டத்தில் மொத்தம் 3,448 பேருந்துகள் உள்ளன. இதில் 1,257 பேருந்துகள் நகரப் பேருந்துகளாகவும், 1,929 பேருந்துகள் வெளியூர் செல்லும் பேருந்துகளாகவும் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 280 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

 

 

 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிதம்பரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் விழுப்புரம் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகள் எல்லாம் பஞ்சப்பூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து இனி இயக்கப்பட இருக்கின்றன.

 

திருச்சியில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இனி பஞ்சப்பூர் வரை இயக்கப்படும். புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதும், பேருந்துகளின் முக்கிய இடம் பஞ்சப்பூருக்கு மாற்றப்படும். வெளியூர் செல்லும் பேருந்துகள் தரை தளத்தில் இருந்தும், நகரப் பேருந்துகள் முதல் தளத்தில் இருந்தும் இயக்கப்படும்.

 

நகரப் பேருந்துகளின் பயண தூரம் சுமார் 5 கி.மீ வரை அதிகரிக்கும். புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நகரப் பேருந்துகள் பஞ்சப்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழியாக செல்லும். மத்திய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக மாற்றப்படும். எந்த பேருந்தும் மத்திய பேருந்து நிலையத்தை தவிர்க்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி கட்டணம் மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,

பயண தூரத்திற்கு ஏற்ப நகர மற்றும் வெளியூர் பேருந்துகளின் கட்டணம் மாறலாம் என்றும் மதுரைக்கும் திருச்சிக்கும் இடையேயான பேருந்து கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், வடக்கில் உள்ள நகரங்களுக்கான பேருந்து கட்டணம் சற்று அதிகரிக்கலாம் என்றும் போக்குவரத்து துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.