திருச்சி: கழிவுநீர் கலந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவம்: கண் துடைப்புக்கு ஆய்வு செய்யும் மேயர் அன்பழகன் . பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி வரும் முன்னாள் துணை மேயர் சீனிவாசன்.
திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உறையூர் பணிக்கண் தெருவில் நேற்று மீண்டும் வந்த குடிநீர் விநியோகம் குறித்து மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு, , கலையின் தெரு, உறையூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் குறித்து மேயர் அன்பழகன் வீடு வீடாக குடிநீரை ஆய்வு செய்து அதன் குளோரின் அளவையும் பொதுமக்கள் முன்னிலையில் குடிநீரைகுடித்துப் பார்த்து சீன் போட்டார்.
அவருடன் கோ அபிஷேகபுரம் மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நகர் நல அலுவலர் விஜய சந்திரன்,செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் உதவி ஆணையர் சென்னி கிருஷ்ணன் உதவி செயற்பொறியாளர் த இப்ராகிம் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.
மேயர் அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாரையும் நேரில் சென்று சந்திக்கவில்லை என கூறப்படுகிறது .
இந்த நிலையில் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் துணைவேருமான ஜெ. சீனிவாசன் கடந்த இரண்டு மூன்று நாட்களாக உறையூர் பகுதிக்கு தினமும் சென்று உயிர் இழந்தவர்கள் வீட்டிற்கு நேரடி சென்று ஆறுதல் கூறினார்.
மேலும் மருத்துவமனையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி சிகிச்சை பெற்று வரும் 50-க்கும் மேற்பட்டோரை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதலும் கூறினார் . மேலும் என்ன உதவி என்றாலும் கேளுங்கள் செய்து தருகிறோம் என மாவட்ட செயலாளர் சீனிவாசன் உறுதி கூறினார் .
அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவினர் நாடகம் ஆடுகின்றனர் என திமுகவினர் கூறினாலும் அவர்கள் யாரும் இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று சென்று ஆறுதலும் கூறவில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அதிமுகவினர் நலத்திட்டங்கள் வழங்கி ஆறுதல் கூறிய நிகழ்வில்
அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி பகுதி செயலாளர்
புத்தூர் ராஜேந்திரன் ,
சார்பு அணி செயலாளர்கள்
இளைஞர் அணி ரஜினிகாந்த்,
ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு
சார்பு அணி நிர்வாகிகள்
கருமண்டபம் சுரேந்தர், சில்வர் சதீஷ்குமார், ஆர்.எம்.எஸ். காலனி பெருமாள், ஆசைத்தம்பி, நாகராஜன், ஏர்போர்ட் நாகராஜ், வாழைக்காய் மண்டி சுரேஷ், கார்த்திகேயன்.வட்ட செயலாளர்கள்உறந்தை முத்தையா, சுப்புரா, அரவாணூர் பன்னீர்செல்வம், வினோத்குமார் பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள்எம்.ஜே.பி. வெஸ்லி, செந்தில்நாதன், சந்திரசேகர், ரசாக், உறையூர் சுரேஷ், பாபர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.