திருச்சியில் மத்திய அரசை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் இடி முரசு இஸ்மாயில் தலைமையில் சாகும் வரை போராட்டம் .
கல்வி நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் சாகும் வரை உண்ணாவிரதம்.
தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது.
மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டால் தான் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ 2, 152 கோடி நிதியை ஒதுக்க முடியும் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் நேற்று மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் தடையை மீறி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்று காலை தொடங்கியது.
இந்தப் போராட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக்ராஜா, மாவட்ட தலைவர் ஜாகிர் கான்,புறநகர் மாவட்ட செயலாளர் முகமது இக்பால்,மாவட்ட தலைவர் அல்லா பிச்சை,மாவட்டத் துணைச் செயலாளர் ஹபீப் முகமது,மாவட்ட பொருளாளர் முகமது முஸ்தபா ஹுசைன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத், மாநகர் மாவட்ட பொருளாளர் ஷபீக், ஜாபர் உசேன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் மத்திய கல்வி அமைச்சரைகண்டித்து கோஷங்கள் எழுப்பி, கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்தியதால் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், மாவட்ட செயலாளர் ரபீக்ராஜா உள்பட ஐந்து பேரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர் .
பின்னர் அவர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடையை மீறி திருச்சி பஸ் நிலையத்தில் திடீரென்று நடந்த போராட்டத்தால் பெரும் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.