திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம். மாவட்ட செயலாளர் குமார் சாதனைகளை விளக்கி கூறினார்
அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைப்படி..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில்
அஇஅதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம்.
நேற்று (21.02.2025 வெள்ளிக்கிழமை), காலை 10.00 மணியளவில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் துண்டு பிரசுரங்களை கடைகளுக்கும், வீடுகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு வழங்கி அஇஅதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறினார்.
நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ப அம்மா பேரவை செயலாளர் ராஜமணிகண்டன் முன்னிலை வகித்தார்.
மேலும் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் SS.இராவணன், SKD.கார்த்திக், நகர செயலாளர் SP.பாண்டியன், பேரூர் செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட கலை பிரிவு செயலாளர் M.P.ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.காசிராமன், SR சபரி மற்றும் வட்ட கழக செயலாளர்கள் RPG.கணேசன், அன்புதுரை, R.அபிமன்யூ, S.ரோஷன், C.முத்துக்குமார், ஆபிரகாம்,அம்மன் மணி, யோகானந்த், வெங்கடேஷ், KP.சங்கர், S.மணி, கோபு, மற்றும் அம்மா பேரவை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னோடிகள் திரளாக பங்கேற்றனர்.