எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் 39 ஆவது வட்டக் கழகம் உள்பட 17 இடங்களில் புதிய கொடிமரங்களில் மாவட்ட செயலாளர் குமார் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் .
எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட சார்பில் 39 வது வார்டு உள்ளிட்ட 17 இடங்களில் புதிய கொடிமரம் ஏற்றி இனிப்புகள் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனமான எம் ஜி ஆரின் 108 -வது பிறந்த நாள் நேற்று அதிமுக கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கொடிமரம் இல்லாத 17 வார்டுகளில் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. இதில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் கொடியேற்றினார்.
இதில் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர்
39 வது வட்டம் மஞ்சள் திடல் பாலம் அருகில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப குமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி காசிராமன், மாவட்டஅம்மா பேரவை செயலாளர் சூரியூர் ராஜா, திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் என்கின்ற கோபால்ராஜ், பொருளாளர் நவநீதன், அவை தலைவர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி பி ஹெச் எல் பாலு, கிருஷ்ணவேணி, வட்டக் கழக நிர்வாகிகள் தனபால், கருப்பையா, வெண்ணிலா, பாத்திமா, துரை மற்றும் எல்லகொடி ரமேஷ் சேட்டு ,அசோக் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபிநாத் ,ரபிக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சி ஏற்பாட்டை 39வது வட்டக் கழக பொறுப்பாளர்
சி. யோகானந்தம் சிறப்பாக செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.