Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வியாபாரி தூக்கு மாட்டி தற்கொலை.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால்
வியாபாரி தூக்கு மாட்டி தற்கொலை.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39) இவர் தனியார் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் டீலர்ஷிப் எடுத்து தண்ணீர் வியாபாரம் செய்து வந்தார்.

TVK ad

இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாத காலமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணன் தனது அறையில் சேலையால் ஆஸ்பெஸ்டாஸ்
கூரைக் கற்றையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தோன்றிய சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.